கேரளாவில் மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்று அம்மாநில காங்கிரஸ் எம் எல் ஏ.பி.சி. ஜார்ஜ் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளவில் தளபதி விஜய்யின் படங்களுக்கு வரவேற்பு அதிகம். மலையாள நடிகர்களுக்கு இணையான வரவேற்பு விஜய்யின் படங்கள் கேரளாவில் கொண்டாடப்படுகின்றன. உதாரணமாக சமீபத்தில் வெளியான சர்கார் படத்தின் போதுகூட இந்திய நடிகர்களிலேயே உயரமாக, விஜய்க்கு 175 உயரத்தில் கட் அவுட் எல்லாம் வைத்து கொண்டாடினார்கள். விஜய்யை தூக்கி வைத்து கொண்டாடுவதை அங்குள்ள சினிமா நட்சத்திரங்கள் ரசிக்கவில்லை. அதிருப்தி தொரிவித்து வருகிறார்கள்.

மோகன்லால் நடித்த ஓடியான் படத்தின் இயக்குனர் ஷிரிக்குமார் விஜய் படத்தின் வசூலை மட்டும் இங்கு கொண்டாடுகிறார்கள் என வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் கேரளாவில், கைரலி தொலைக்காட்சியில் லவுட் ஸ்பீகர் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான ஹல்பி பிரான்சிஸ் கேரளாவில், மலையாள நடிகர்களைவிட, தமிழ் நாட்டு நடிகர் விஜய்க்கு இருக்கும் வரவேற்பு குறித்து வருத்தத்துடன் விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ பிசி ஜார்ஜ் , ”மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு கேரளாவில் கூடுதலான ரசிகர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் திரையரங்குகள் முன் கூடி விஜய் கட்- டவுட்டுகளுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்கின்றனர். ” என்று தெரிவித்தார்.

இவரது கருத்துக்கு மோகன்லால், மம்முட்டி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்..