தமிழகத்தில் அரசியலுக்கும் சினிமாவுக்கும் பெரிய தொடர்பு இருக்கிறது. கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோர் சினிமாவில் பணியாற்றி அரசியலுக்கு வந்து ஆட்சி செய்து பல சாதனை புரிந்தவர்கள். இந்நிலையில், இவர்களின் மறைவிற்கு பிறகு அந்த இடங்கள் வெற்றிடமாகத்தான் உள்ளது.

தற்போது கமல் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில், ரஜினியும் கட்சி தொடங்குவதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவர்களுக்கு போட்டியாக சிவாஜி கணேசனின் மகன் பிரபுவும் தற்போது அரசியலில் குதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபுவை காங்கிரஸ் கட்சியில் இணைக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு ரசிகர்களை ஒன்று சேர்க்க தயாரிப்பாளரும் பிரபுவின் அண்ணனுமான ராம்குமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னையில் அன்னை இல்லத்திற்கு சென்று, சிவாஜி கணேசனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்பு பிரபுவை கட்சியில் இணைக்கவுள்ளதாக தெரிகிறது. இதே காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே குஷ்பூ, நக்மா ஆகியோர் உள்ளனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அரசியலில் நுழைந்து பின்பு அதனை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரது மகன் பிரபு தற்போது அரசியலில் நுழையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.