சினிமா நடிகைகள் பொதுவாக நான் நடிக்க வரலேன்னா டாக்டர் ஆயிருப்பேன் இஞ்சினியர் ஆயிருப்பேன், கலெக்டர் ஆயிருப்பேன், என்று சொல்வதும் தனக்கு கணவனாக வருபவர் நார்மலாக இருந்தால் போதும் சுமாரான கலராக இருந்தால் போதும், சுமாரான வேலையில் இருந்தால் கூட போதும், சொந்த தொழில் பார்ப்பவராக இருந்தால் நலம்  அவர் நல்லவராக இருக்க வேண்டும் ஒரு மொபைல் கடை வைத்திருப்பவராக இருந்தால் கூட போதும் என் மீது அன்புடன் இருக்க வேண்டும் என்று பேட்டி கொடுப்பார்கள்.

கடைசியில் நம்மவர்கள் பரவாயில்லை நார்மலான குவாலிபிகேசன் தான் கேக்குறாங்கன்னு அந்த நடிகைக்கு ஒரு அப்ளிகேசன போட்டுவிட்டா கடைசியில் மொபைல் கடை வச்சிருந்தா போதும்னு சொல்லிட்டு மொபைல் தயாரிக்குற நிறுவன அதிபரையே திருமணம் செய்துக்குவாங்க சுருக்கமா சொன்னால் தொழில் அதிபரைத்தான் கல்யாணம் செஞ்சுக்குவாங்க, கவுண்டமணி கூட ஒரு படத்தில் சொல்வார் , ஆங் தொழிலதிபர் சார் நீங்க ஒரு சினிமா நடிகைய கல்யாணம் பண்ணிக்கங்கன்னு,  சில நடிகைகள் பெற்றோர் பார்க்கும் டாக்டர், இஞ்சினியர் மாப்பிள்ளைகளை மணந்து அமெரிக்கா பக்கம் செட்டில் ஆயிடுவாங்க.

இது ஒரு கால ட்ரெண்ட் ஆக இருந்த நிலையில் இப்பலாம் இந்தியாவில் உள்ள நடிகைகள் யாரும் இந்தியாக்காரர்களை கூட விரும்புவதில்லை அவர் எவ்வளவு பெரிய தொழில் அதிபரா இருந்தாலும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் தற்போது விரும்பும் நபர்கள் எல்லாம் அமெரிக்கா, ரஷ்யா மேற்கத்திய நாடுகளை சேர்ந்த நபர்களாகவே இருக்கிறார்கள்.

நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமணம் செய்து கொள்ளவிருப்பது பெரும்பாலோருக்கு தெரியும் ஹாலிவுட் படங்களில் நடிக்க சென்ற ப்ரியங்கா அங்கு பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து வருகிறார் விரைவில் திருமணமும் செய்துகொள்ள இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் தமிழில் சிவாஜி, மழை, அழகிய தமிழ் மகன் என பல முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே கோஷீவ் என்ற டென்னிஸ் வீரரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி மணந்து கொண்டார்.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகத்தில் முன்னணி நடிகையாகவும் தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்த இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரேவ் என்ற நபரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின முதலில் மறுத்த இலியானா இப்போது ஆம் அவர் மனது நல்ல மனது அவரின் நல்ல இதயம்தான் என்னை காதலிக்க வைத்தது என்று கூறியுள்ளார்.

நடிகைகள் வெள்ளைக்காரர்களை லவ் பண்ணுவது தொடர்கதையானாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

Loading...