Couple plunge 50 feet bridge – பெரு நாட்டில் உள்ள ஒரு பாலத்தில் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த காதலர்கள் அங்கிருந்து தவறி கீழே விழுந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெருநாட்டை சேர்ந்தவர்கள் மேபெத் எஸ்பினோஷ்(34) மற்றும் ஹெக்டர் விடல்(36). இவர்கள் இருவரும் காதலர்கள். இவர்கள் கடந்த சனிக்கிழமை பெரு நாட்டில் உள்ள பெத்லெகம் 50 அடி உயர பாலத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, காதலன் ஹெக்டர் தனது காதலியை தூக்கி பாலத்தின் தடுப்பு கம்பி உட்கார வைத்து முத்தம் கொடுத்தார். இருவரும் தங்களை மறந்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் ஹெக்டரை அவரின் காதலி தனது காலுக்குள் இழுத்தார். அப்போது இருவரும் நிலை தடுமாறி பாலத்தின் மேலே இருந்து கீழே விழுந்து விட்டனர். இதில், மேபெத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹெக்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.