இரும்புத் திரைக்கு எதிராக வழக்கு: சோகத்தில் விஷால் ரசிகர்கள்

அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள இரும்புத்திரை படத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரும்புத்திரை படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டம பற்றிய தவறான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி நாமக்கல்லைச் சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

விஷால் நாயகனாகவும், சமந்தா நாயகியாகவும் அர்ஜூன் வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் ஆதார் அடையாள அட்டைக்கு கொடுக்கப்படும் தகவல்கள் தவறான பாதைக்கு பயன்படுத்தபடுகிறது என்று காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆதார் அட்டை மக்களின் நலனை கருத்தில் கொண்டு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதைபற்றி தவறான செய்திகள் இந்த படத்தின் மூலம் பரப்பும் விதத்தில் அமைந்துள்ளது. எனவே இப்படி தவறான கருத்துடன் படம் வெளி வந்தால் ஆதார் திட்டங்கள் பற்றி மக்கள மனதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இரும்புத்திரை படத்தில் ஆதார் பற்றிய தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளை நீக்கினால் தான் படத்தை வெளியிட அனுமதிப்போம், எனவே இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி படம் தணிக்கை செய்யப்பட்டு தான் வெளியாகி உள்ளது. எனவே படத்திற்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டார்.