முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி சிறையில் இருந்த கருணாசுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கருணாஸ்
தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.  அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் விமர்சித்தார். தனது முக்குலத்தோர் புலிப்படை ஜாதிப் பெருமையை இஷ்டத்திற்கு அளந்து பேசினார். பல ஜாதியை அவர் விமர்சித்தும் பேசியிருந்தார்.
இதனையடுத்து அவரின் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கருணாஸ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் அவரது ஜாமீன் மனுவை இன்று விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.