திருப்பூரை சேர்ந்த 17 வயது கூட நிரம்பாத 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை ஆட்டோ டிரைவர் ஒருவர் ஏமாற்றி கர்ப்பமாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த மாணவியின் கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த மாணவி தற்போது காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார். மாணவியின் தாய் தான் மகளின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். அவர் தாக்கல் செய்த மனுவில், எனது மகள் பள்ளியில் படிக்கும்போது தினமும் சந்தோஷ் குமார் என்பவரின் ஆட்டோவில் சென்று வந்தார். ஏற்கனவே திருமணமான சந்தோஷ் குமார் தனக்கு திருமணம் ஆகவில்லை என பொய் கூறி எனது மகளை காதல் வலையில் விழ வைத்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  போக்கு காட்டிய எஸ்.வி.சேகர் பின்வாசல் வழியாக நீதிமன்றத்தில் ஆஜர்!

இதனை நம்பி எனது மகள் கடந்த மே மாதம் அவனுடன் சென்றுவிட்டாள். இதனையடுத்து காவல்துறையில் புகார் அளித்து அவர்கள் எனது மகளை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியபோது அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சந்தோஷ் குமார் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க தடை - பொதுமக்கள் அதிர்ச்சி

காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள எனது மகளுக்கு இன்னும் 17 வயதுகூட ஆகவில்லை. எனவே மைனர் பெண்ணான என் மகளது வயிற்றில் உள்ள கருவைக் கலைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். மேலும் எனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி என்னிடம் ஒப்படைக்க திருப்பூர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கூறிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாணவியின் கருவைக் கலைப்பது குறித்து பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் விசாரணையின் போது, மாணவியின் உடல் நலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவியின் வயிற்றில் வளரும் கருவை உடனடியாகக் கலைக்க வேண்டும் எனக் கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.