மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரம் மற்றும் அவர் உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என்பது குறித்து தெரிவிக்க வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 1997-98-ஆம் ஆண்டு தனது சொத்து வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை. அப்போது அவரிடம் அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பாக 4.67 கோடி ரூபாய் அளவுக்கு இருந்ததாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை தனது அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மதிப்பு 3.83 கோடி ரூபாய் அளவுக்கு இருந்ததாக கூறியது.

இதையும் படிங்க பாஸ்-  ரூ.4 ஆயிரம் கோடியை தானமாக வழங்கிய நடிகர்....

இதனையடுத்து வருமான வரித்துறை மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் ஜெயலலிதா இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த வருமான வரித்துறை மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை மாற்றியமைத்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

இதையும் படிங்க பாஸ்-  ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம்: சசிகலா கேரக்டரில் இந்த நடிகையா? கசிந்த முக்கியத் தகவல்..

வருமான வரித்துறை சார்பில் இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை அமர்வு தற்போது, ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளின் விவரம் மற்றும் அவர் உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என்பது குறித்து தெரிவிக்க வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விசாரணை வரும் 26-ஆம் தேதி வர உள்ளது.