விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் மற்றும் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா ஆகியப் படங்களுக்கு ஹைதராபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி ஆகிய படங்களை அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி இணைந்து நடித்துள்ள சிந்துபாத் ஜூன் மாதம் ரிலிஸ் ஆக இருக்கிறது. அதேப் போல தனுஷ் நடிக்கும் எனை நோக்கிப் பாயும் தோட்டா படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலிஸுக்கு தயாராகி வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  கஸ்தூரி ராஜாவின் முதல் திகில் படம் 'பாண்டிமுனி

இந்த இருப் படங்களையும் தமிழில் வெளியிட கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகியப் படங்களை வெளியிட்டது. அதில் பாகுபலி தயாரிப்பு நிறுவனத்திற்கு 17 கோடி ரூபாய் பணபாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  கனா ஏன் வெற்றி? சீதக்காதி ஏன் தோல்வி...?

பாகுபலி திரைப்பட தயாரிப்பு நிறுவனமானது ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கே புரொடக்ஷன்ஸ் எங்களுக்குத் தரவேண்டிய பாக்கியை தராமல் வேறுப் படங்களை வெளியிடக்கூடாது என கூறியிருந்தது. இதை ஏற்ற நீதிமன்றம் விஜய் சேதுபதியின் சிந்துபாத், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படங்களை வெளியிட ஹைதராபாத் உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.