சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் தொழிலதிபரான உதயபாலன் கொலை வழக்கில் அவரது மனைவிக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த உதயபாலன் – உதயகீதா தம்பதியினர். உதயபாலன் பல்வேறு தொழில்களை செய்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று பெண் குழந்தைகள். தொழில் விஷயமாக உதயபாலன் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவதால் உதயகீதாவுக்கு டாக்ஸி டிரைவரான பிரபாகரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையறிந்த உதயபாலன் தனது மனைவியைக் கண்டித்து சண்டையிட்டுள்ளார். இதை தனது காதலனிடம் சொல்லியுள்ளார் கீதா. இதையடுத்து உதயபாலனைக் கொல்லும் திட்டத்தைக் கூறியுள்ளார் பிரபாகரன். இதைக் கேட்டு முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் திட்டத்துக்கு ஒத்துக்கொண்டுள்ளார். கொலை நடந்த அன்று குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த உதயபாலனை பிரபாகரன் தனது கூட்டாளிகளோடு வந்து கொலை செய்துள்ளார். பணத்துக்காக நடந்த கொலை என்பது போல் காட்ட வீட்டில் இருந்து 30,000 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

இது சம்மந்தமான போலிஸ் விசாரணையில் உதயகீதா முன்னுக்குப் பின் முரணான பதில்களை சொல்ல போலிஸ் விசாரணையைத் தீவிரமாக்க உதயகீதா உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து இப்போது இந்த வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.