மும்பையில் கிரிக்கெட் வீரர் ஒருவரை மர்மக்கும்பல் நடுரோட்டில் வைத்து வெட்டியுள்ள சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ராகேஷ் பவார் பிரபலமான கிரிக்கெட் வீரராவார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தான் வசிக்கும் பகுதியில் குழந்தைகளுக்கு கிரிக்கெட் கற்றுதரும் பயிற்சி மையமும் நடத்தி வந்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  விரைவில் ஓய்வு.. அதற்குப் பின் என்ன ? – தோனி பதில் !

நேற்று முன் தினம் இரவு 12 மணியளவில் அவருடைய தோழி ஒருவருடன் பைக்கில் வந்து கொண்டிருந்த ராகேஷை மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத ராகேஷை, அவர்கள் சிறிய ரக கோடாரியாலும், இரும்பு கம்பிகளாலும் சராமாரியாக தாக்கியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த ராகேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  நடுவரிடம் மன்னித்துவிடுங்கள் என கெஞ்சிய விராட் கோலி!

ராகேஷோடு வந்த தோழி போலிஸாருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்துக்கு வந்த போலிஸ் அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ல்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அந்த மூன்று பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான பின்னணி குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.