விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை முதலை ஒன்று இழுத்துச் சென்று சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்போடியா நாட்டில் வசித்து வருபவர் நய்(nay). இவருக்கு மூன்று குழந்தைகள். மூன்றாவது குழந்தை சமீபத்தில் பிறந்ததால் அதனை கவனிக்கவே அவருக்கு நேரம் சரியாக இருததாக தெரிகிறது. சம்பவத்தன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அவரது 2 வயது மகளை காணாததை அடுத்து குழந்தையின் தந்தை தேடி அலைந்துள்ளார்.

இவர்க்ள் வீட்டின் அருகே முதலை பண்ணை ஒன்று உள்ளது. அங்கு சென்று குழந்தையை தேடியுள்ளார். அப்போது முதலை கூட்டங்களுக்கு நடுவே தன் குழந்தையின் மNடை ஓட்டினை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விசாரிக்கையில் குழந்தை முதலை பண்ணை அருகே விளையாடிக்கொண்டிருந்ததை உறுதி செய்தார். குழந்தையின் தாய் மெத்தனபோக்கே இந்த சம்பவத்திற்கு காரணம் என அந்த நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.