பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, ஆரவ் மீது காதல் கொண்டார் ஓவியா. தொடக்கத்தில் அவருடன் நெருக்கமாகவே இருந்தார் ஆரவ். ஆனால், திடீரென ஓவியாவின் காதலை ஏற்க மறுத்தார். தான் நட்பாகத்தான் பழகுகிறேன் என ஓவியாவிடம் அவர் கூறினார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த ஓவியா, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். மேலும், தன்னுடைய காதலை மீண்டும் நான் பெறுவேன். ஆரவை இப்போதும் நேசிக்கிறேன் என ஓவியா கூறினார். ஒருபக்கம், ஓவியாவிற்கு மருத்துவ முத்தம் கொடுத்ததை ஆரவ் ஒப்புக்கொண்டார். எனவே, பிக்பாஸ் வீட்டிலிருந்து ஆரவ் வெளியேறியதும், அவர் ஓவியாவை சந்திப்பார் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஓவியா  தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், காதலை கைவிட்டு விட்டதாக ஓவியா கூறியுள்ளார்.

ஓவியாவின் இந்த முடிவை பலர் வரவேற்றுள்ளனர்.அதில் நடிகர் சதிஷும் ஒருவர். நடிகர் சதிஷ் ஆரம்பம் முதல் இன்று வரை பிக் பாஸ் ஒவியாவிற்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:- அப்போ அந்த தம்பி 100 நாட்களுக்கு பின்பும் உள்ளே இருக்க வேண்டியதுதான் போல என்று நக்கலடித்துள்ளார்.