தல அஜித் நடிப்பில் சிவா இயக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் என கடந்த சில நாட்களாக செய்திகள் உலாவி வந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

சற்றுமுன் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இமான் இசையமைப்பது மட்டுமின்றி அஜித்தை ஒரு பாடலை பாட வைக்கவும் அவர் முயற்சி எடுக்கவுள்ளதாகவும் அதற்கு அஜித் சம்மதித்துள்ளதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க பாஸ்-  மீண்டும் வியாழக்கிழமை செண்டிமெண்டில் 'விவேகம்'

அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகும் இந்த படம் ஒரு ஃபேமிலி செண்டிமெண்ட் கதையம்சம் கொண்டது என்றும், இந்த படத்தில் பெரும்பாலும் மெலடி பாடல்கள் இருக்கும் என்பதால் இமான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது