தனுஷ் தற்போது ‘வடசென்னை’, எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘மாரி 2’ ஆகிய படங்களிலும் ஒரு ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் ஒரு படத்தை இயக்கி நடிப்பதாக இருந்தது.

இந்த நிலையில் தேனாண்டாள் நிறுவனம், தனது கனவுப்படமான ‘சங்கமித்ராவை அடுத்த மாதம் முதல் தொடங்கவிருப்பதால், பட்ஜெட் காரணமாக, தனுஷ் படத்தை தயாரிக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே தனுஷின் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தவிர படத்தில் திட்டமிட்டதில் வேறு மாற்றம் இல்லை என்றும் கூறப்படுகிறது.