அமிதாப் பச்சனுக்கு டான்ஸ் கற்றுத் தருகிறாரா பிரபு தேவா?

     

 

      பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா, பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக இணைகிறார்.இந்த 75 வயதில் கால்களை அசைத்து ஆடுவதில் சிரமம் உள்ளது என்று அமிதாப் கூறியுள்ளார்.இது குறித்து அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் கிண்டலாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.கடந்த ஞாயிறு அன்று தன்னுடைய புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றி அமிதாப் கூறியது, ‘இந்த 75 வயதில் நான் டான்ஸ் ஆட வேண்டும்…அதுவும் ஜீனியஸான பிரபு தேவா இயக்கத்தில்… வேறு எந்த புகழிடமும் இல்லாமல் இன்னும் வீட்டில் தான் இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

      அமிதாப் இந்த புதிய படத்தை பற்றி வேறு எந்த தகவல்களையும் பகிரவில்லை.தற்போது அமிதாப் ‘கோன் பனேகா க்ரோர்பதி’என்ற புதிய கேம் ஷோவிலும்,102 நாட் அவுட் மற்றும் தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.