சுதந்திர தினத்திற்காக தங்கத்தில் உருவான ‘தங்கல்’ கேக்

12:43 மணி

இந்தியாவின் சுதந்திர தினம் வருகிற 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு துபாயில் இயங்கி வரும் இந்திய தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று இந்திய தேசியக்கொடி மற்றும் நடிகர் அமீர்கான் உருவத்துடன் கூடிய ‘தங்க கேக்’ ஒன்றை தயாரித்துள்ளது. கேக்குக்கு பயன்படுத்தப்படும் சாதாரண மாவில் செய்யப்பட்ட இந்த கேக்கின் வெளிப்புறம் முழுவதும் தங்கத் துகள்கள் தூவப்பட்டுள்ளது.

இந்த கேக்கில் அமீர்கான் நடித்த ‘தங்கல்’ படத்தில் இடம்பெற்ற சிறுமிகள், மற்றும் புல், கொட்டகை, மணல் தளம், தங்க பதக்கங்கள், நடிகர் அமீர்கான் அந்த படத்தில் இருந்த தோற்றம் ஆகியவற்றை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். இந்த கேக் செய்வதற்கு அவர்களுக்கு கிட்டத்தட்ட நான்கு வாரம் ஆனதாக கூறப்படுகிறது. இந்த கேக் 4 அடி உயரமும் 54 கிலோ எடையும் கொண்டுள்ளது. இதில் அமீர்கானின் உருவம் மட்டும் 30 கிலோ அளவுக்கு செய்துள்ளனர்.

இந்த கேக்கை தயாரிக்க மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் திர்ஹார் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 லட்சம்) செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கேக்கை 240 பேருக்கு பகிர்ந்து கொடுக்கலாம் என்றும், இந்திய சுதந்திர தினத்திற்காக இந்த கேக்கை அர்ப்பணித்துள்ளதாகவும் இதை தயாரித்த பேக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

(Visited 14 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com