Darbar First look poster – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியானது.

இன்று வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளன. ரஜினிக்கு பின்னால் போலீஸ் தொப்பி, துப்பாக்கிகள், போலீஸ் நாய், குற்றம் நடந்த இடத்தில் போலீசார் வைக்கும் ஸ்டிக்கர், போலீஸ் அணியும் பெல்ட், மேப் மற்றும் துப்பாக்கிக் குண்டுகள் இடம் பெற்றுள்ளன. எனவே, இப்படத்தில் ரஜினி ஒரு காவல் அதிகாரியாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  அஜித்துக்கு பிறந்த நாள் ; இந்திய அளவில் டிரெண்டிங் : தெறிக்க விட்ட தல ரசிகர்கள்

அதேபோல், நான் நல்லவனா, கெட்டவனா, மோசமானவனா என்பதை நீதான் முடிவு செய்கிறாய் என்கிற வசனம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும், மும்பை கேட் புகைப்படம் இடம் பெற்றுள்ளதால் இப்படம் முழுக்க முழுக்க மும்பையில் நடப்பது போலவே கதை அமைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினி 166 ஷூட்டிங் - புதிய அப்டேட்

இந்நிலையில், ‘தர்பார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ‘கில்லிங் கந்தர்’ என்கிற ஆங்கில பட போஸ்டரின் தழுவல் என சில இணையவாசிகள் கிளப்பிவிட்டுள்ளனர். அதற்கான புகைப்படத்தையும் வெளியிட்டு இரண்டையும் ஒப்பீடு செய்து வருகின்றனர்.