காவேரி மருத்துவமனையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை அவரது மனைவி தயாளு அம்மாள் நேற்று அவரது அறைக்கே சென்று பார்த்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த தயாளு அம்மாளின் நேற்றைய விசிட் தமிழகத்தையே பரபரப்பாக்கி விட்டது.

தயாளு அம்மாள் வயது முதுமை காரணமாக அடிக்கடி நினைவு இழந்து காணப்படுகிறார். வீட்டுக்கு வரும் மிகவும் நெருங்கிய உறவினர்களையே யார் என்று கேட்கிறார் தயாளு அம்மாள். அவருக்கு அல்சைமர் எனப்படும் வியாதி இருப்பதால் இப்படி நினைவு இழந்து காணப்படுகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோபாலபுரம் வீட்டுக்கு சென்ற ஸ்டாலினை பார்த்ததும் தயாளு அம்மாள், தலைவர் எப்படி இருக்காரு? என்று கேட்டிருக்கிறார்.

தயாளு அம்மாளின் இந்த வார்த்தையை கேட்டதும் ஸ்டாலின் ஒரு கணம் அதிர்ந்துவிட்டாராம். அடிக்கடி நினைவு இல்லாமல் இருக்கும் தயாளு அம்மாள் அப்போது திடீரென நினைவு வந்தவர் போல, தலைவர் எப்படி இருக்காரு? என கேட்டதும் ஸ்டாலின், நல்லாருக்காரும்மா, உன்னை அழைச்சிட்டு போய் காட்டுறேன் என கூறியிருக்கிறார். அதன் பின்னர் தான் செல்வியிடம் சொல்லி நேற்று தயாளு அம்மாளை மருத்துவமனைக்கு கருணாநிதியின் காரிலேயே அழைத்து சென்றிருக்கிறார் ஸ்டாலின்.

Loading...