திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தொடர்ந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உடல்நலம் குன்றிய அவரை, தான் அருகில் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என அவரது மனைவி தயாளு அம்மாள் பிடிவாதமாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு நாட்களாகவே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வந்தது. இதனையடுத்து அவரது மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வந்து அவரை நேரில் பார்த்தார். தயாளு அம்மாளும் உடல் நலக்குறைவாக இருக்கிறார். அவரே மருத்துவமனைக்கு வந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை அதிகமாக்கியது.

கலைஞர் பயன்படுத்தும் காரிலேயே தயாளு அம்மாளை அழைத்து வந்த ஸ்டாலின் கலைஞர் அனுமதிக்கப்பட்ட அறைக்குள் போய்ப் பார்க்க வைத்திருக்கிறார். அப்போது செல்வி, கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர். அவரை பார்த்த தயாளு அம்மாள் கண்கள் கலங்கி நான் இங்கேயே இருந்து அவரை பார்த்துக்குறேன் என பிடிவாதமாக சொன்னாராம்.

இதனையடுத்து ஸ்டாலின், தலைவருக்கு சரியாகிடுச்சு. நீங்க வீட்டுக்கு போங்க, நாங்க அவரை அழைச்சிட்டு வர்றோம் என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்.