காதலா் தினத்தை முன்னிட்டு உலவிரவு பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் வீடியோ விஜய் டிவி தொகுப்பாளினி டிடியும் அவருடன் டொவினா தாமஸ் நடிப்பில் வெளியாகியுள்ளது.

யு டியூப் சேனலான ஒன்றாக என்டா்டெயின்மென்ட்டை இயக்குநா் கௌதம் வாசுதேவமேனன் ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் ஏற்கனவே லெட்சுமி, மா என்ற இரு குறும்படங்களை வெளியிட்டுள்ளார். லட்சுமி குறும்படம் மிகப்பெரிய பரபரப்பையை ஏற்படுத்தியது. அதுபோல மா குறும் படமானது பத்தாம் வகுப்பு மாணவியின் கர்ப்பம் பற்றியதாக அமைந்து தாக்கத்தை ஏற்படுத்தியது. இவா் குறும்படங்கள் மட்டுமின்றி தனி இசைப்பாடல்கள் அடங்கிய வீடியோக்களையும் தன்னுடைய யுடியூப் சேனல் மூலம் தற்போது வெளியிட ஆரம்பித்துள்ளார்.

உலவிரவு பாடல் அருமையாக உள்ளது. இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இசையை கார்த்திக் அமைந்துள்ள பாடலில் டிடி என்கிற திவ்யதா்ஷனியும் மலையாள நடிகா் டொவினா தாமஸ் நாயகனாகவும் நடித்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வீடியோ ஆல்பத்தில் டிடி ரொம்ப நெருக்கமாக நடித்துள்ளார். இவருக்கு என்று ஒரு ரசிக பட்டாளமே இருக்கிறது. இதை பார்த்த ரசிகா்கள் ஏன் இப்படி டிடி நடித்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனா். குடும்பத்தில் சில பிரச்சனைகள் காரணமாக டிடி தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியிலிருந்து விலகி இருந்தார். குடும்பத்தை விட்டு நடிப்பில் இறங்கி விட்டாரோ!