விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியை இந்த டிவியை தவிர எந்த டிவியிலும் இவரை யாரும் பார்க்க முடியாது. வெள்ளித்திரையில் நயன்தாரா எப்படி லேடி சூப்பர் ஸ்டாரோ அதுபோல சின்னத்திரையில் டிடி தான் லேடி சூப்பா் ஸ்டார். அந்த அளவுக்கு அவா் ரசிகா்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். டிடி ஒரு தனி ரசிக பட்டாளத்தை வைத்துள்ளார். இவா் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் கலகலப்பாக கொண்டு செல்லுவார்.

டிடி விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் அன்புடன் டிடி நிகழ்ச்சி மிக பிரபலம். சினிமா பிரபலங்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும்.

இந்நிலையில் டிடியை அவரது ரசிகா்கள் வேறொரு சேனலில் பார்க்கலாம். யெஸ் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ளார். அவருடன் இயக்குநா் கௌதம் மேனனும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார். இது டிடிக்கு ரசிகா்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான்.