இவர் யாரென்று தெரிகிறதா?

சின்னத்திரை மூலம் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.  இவருக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டமே உண்டு. அவ்வப்போது சில சினிமாக்களில் தலைகாட்டி வந்தார். சமீபத்தில் பவர் பாண்டியில் சில காட்சிகள் நடித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம்  படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் இவர் நடித்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.