குத்தாட்டத்துடன் திரும்ப வந்த டிடி

DD

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் முக்கிய இடம் வகிப்பவர் டிடி என்ற திவ்யதர்ஷிணி. இவர் பங்குபெறும் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். கடந்த சில மாதங்களாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காத இவர் சமீபத்தில் எங்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் டிடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் தொகுத்து வழங்கும் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் டிடி ஹிந்தி பாடலுக்கு கலக்கல் குத்தாட்டம் போட்டார். அந்த வீடியோவை ஷேர் செய்த அவர், எனக்கு டான்ஸ் மிகவும் பிடிக்கும். வீல்சேரில் அமர்ந்திருந்தபோது இதை தான் மிகவும் மிஸ் செய்தேன். ஆனால் என்னால் இப்போது முடிந்தது. உங்களாலும் முடியும் என்று கூறியுள்ளார்.