ஆரம்பத்தில் இருந்தே விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், அந்த டிவியின் செல்லப்பிள்ளையாகவும் இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்ற டிடி.

இந்த நிலையில் விஜய் டிவியின் போட்டி தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக டிடி கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரித்தபோது அந்த நிகழ்ச்சி இசைஞானி இளையராஜாவை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சி என்றும், இசைஞானியின் தீவிர ரசிகையான டிடி, இதன் காரணமாகவே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், மற்றபடி வேறு தொலைக்காட்சிக்கு மாறும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.