சின்னத்திரையில் வரும் சீரியல்கள் மட்டுமில்லை டிவி ஷோக்களும் வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துவிட்டது. அவ்வாறு டிவி ஷோக்களில் தொகுப்பாளிகள் பலர் பிரபலமாகியுள்ளனர்.

இதில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ‘டிடி’ என்ற திவ்யாதர்ஷினியை அனைவருக்கும் தெரிந்திருக்கும். பல சினிமா பட விழாக்களையும் தொகுத்தும், பல பிரபலங்களை நேர்காணலும் செய்திருக்கிறார்.

அதனோடு, சில படங்களில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், தற்போது டிடி தனது டிவிட்டர் பக்கத்தில் புதுப்புது ஆடைகளை அணிந்து அழகான புகைப்படங்களை அவரது ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.