அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா படங்கள்
மூலம் புகழ் பெற்ற தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் டியர் காம்ரேட்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா நடித்துள்ளார். பரத் கம்மா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில், யாஷ் ரங்கினேனி தயாரித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து வருகிறார்.

சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய டியர் காம்ரேட் படம் , ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மே மாதம் படம் வெளியாக உள்ளது. இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. டியர் காம்ரேட் பட டீசர் வரும் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.