திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நடந்து முடிந்தது. இதனையடுத்து அவரது இறப்பு சென்னை பெருநகர மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

95 வயதான திமுக தலைவரின் குடும்பம் மிகப்பெரியது. கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி. அவர் தொடக்கத்திலேயே இறந்துவிட்டதால் தயாளு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இரண்டாவது மனைவியாக ராஜாத்தி என்பவரையும் சேர்த்துக்கொண்டார் கருணாநிதி.

இந்நிலையில் அவரது இறப்பு சான்றிதழில் கருணாநிதியின் வயது, இறந்த தேதி , இறந்த இடம், தாய், தந்தை பெயர் இடம்பெற்றுள்ளது போல அவரது மனைவியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அதில் கருணாநிதியின் மனைவியின் பெயராக தயாளு இடம்பெற்றுள்ளது. ராஜாத்தியின் பெயர் இடம்பெறவில்லை. கருணாநிதி, ராஜாத்தியின் மகள் தான் கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது.