அசாமில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த 11 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த மார்ச் 23-ஆம் தேதி அசாமின் நான்கான் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 5-ஆம் வகுப்பு படித்து வந்த 11 வயது மாணவியை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. பின்னர் அந்த சிறுமியை எரித்துக்கொலை செய்ய முயற்சித்தனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  காலையில் திருமணமான 17 வயது சிறுமிக்கு மாலையில் குழந்தை பிறந்த அதிர்ச்சி சம்பவம்!

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிலர் தப்பியோடினர், பிடிபட்ட முக்கியாமன குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியது நீதிமன்றம். இரண்டு பேர் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். சிலர் குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.

அசாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்த அதிரடி தீர்ப்பு வந்துள்ளது.