டிரைவர் ராஜாவால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வெளியிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜெ.வின் மறைவுக்கு பின் ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’ தொடங்கிய தீபா அரசியலில் தீவிரமாக செயல்படவில்லை. மேலும், அதிலிருந்து நிர்வாகிகள் பலரும் விலக பேரவையும் வலுவிழந்தது. சமீபத்தில், அரசியலில் இருந்தே விலகுகிறேன் என செய்தி வெளியிட்டு தீபா பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், தன்னை நிர்வாகிகள் யாரும் தொந்தரவு செய்தால் காவல்துறையில் புகார் செய்வேன் எனவும் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், டிரைவர் ராஜா மீது அவர் பரபரப்பு புகார் கூறி தீபா வெளியிட்டதாக ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது. அதன் சாராம்சம் இதுதான்.

டிரைவர் ராஜா என்னை என் கணவரிடமிருந்து என்னை பிரித்து என்னை தனிமைப்படுத்தி பல துன்பங்களுக்கு என்னை ஆளாக்க மிகப்பெரிய சூழ்ச்சியை செய்துள்ளார். அவரால் எனது பேரவைக்கும், எனக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், ராஜாவால் எனது கணவர் மற்றும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என அவர் பேசியுள்ளார்.

ஆனால், இந்த ஆடியோ குறித்து தீபாவோ அல்லது காவல்துறை இன்னும் எந்த தகவலையும் உறுதி செய்யவில்லை.