‘தெய்வமகள்’ நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் ‘தெய்வமகள்’. இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மட்டுமல்லாது சிறியவர்கள், இளைஞர்கள் என பலரும் அடிமையாகிவிட்டார்கள். அதேநேரத்தில், இந்த சீரியலை கிண்டல் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்தளவுக்கு இந்த சீரியல் அனைவரிடத்திலும் பிரபலமாகி வருகிறது.

இந்த சீரியலில் சத்யாவாக வரும் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. வாணி போஜனுக்காகவும், காயத்ரி கதாபாத்திரத்திற்காகவும் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலில் சத்யாவின் தங்கையாக நடித்திருப்பவர் ஷப்ணம். இவருக்கு சமீபத்தில் சென்னையில் உள்ள கிளப் ஹவுஸ் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிச்சயதார்த்த விழாவிற்கு ‘தெய்வமகள்’ சீரியலில் நடித்து வரும் பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்ட அந்த சீரியலில் நடித்துவரும் பல்வேறு நட்சத்திரங்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.