சின்னத்திரை சீரியல்கள் ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருதோடு அவா்களுக்குகென்று தனி ரசிக வட்டமே உள்ளது. அந்த வரியைில் சித்தி, அத்திபூக்கள்,வாணி ராணி, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களுக்கு என்று பெண் ரசிகைள் மட்டுமின்றி ஆண் ரசிகர்களும் இருக்கின்றனா். அதுபோல தெய்வமகள் சீரியல் அமோக வரவேற்பை பெற்றதோடு அதில் வரும் சத்யாவாக வாணி போஜன், அண்ணியாராக வரும் ரேகாகுமார் இவா்களுக்கு ஆண் ரசிகா்களும உண்டு. அதுவும் அண்ணியார் காயத்ரி தனி ரசிககூட்டமே இருக்கிறது. தற்போது தான் சீரியல் முடிவு பெற்றது. சன் டிவியில் தெய்வமகள் கொண்டாட்டம் அந்த சீரியல் நடித்த அனைவரும் பங்கு பெற்று கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

தெய்வமகளில் நடித்த வாணிபோஜன் என்று கூறினால் யாருக்கும் தெரியாது. ஆனால் சத்யா என்றால் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு அந்த சீரியல் அவருக்கு புகழை பெற்று கொடுத்தது. சமீபத்தில் ஒரு பத்திரிகை சார்பில் ஒரு நிகழ்ச்சியை நடந்தியது. அந்த நிகழ்ச்சியானது உடைத்து பேசுவேன் என்ற பெயரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பெண்களும் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமைகள் குறித்து பேசினார்கள். இதில் தெய்வமகள் சீரியல் புகழ் சத்யாவாக நடித்த வாணியும் கலந்து கொண்டு பேசினார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை பற்றிய பேசிய வாணி, தனக்கு சின்ன வயதில் நடந்த பாலியல் தொல்லை பற்றி தைரியமாகவும், ஒப்பனாகவும் பேசினார், அவா் நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது தன்னுடைய தோழி வீட்டிற்கு சென்றாராம், அப்போது அங்கு தோழியின் அப்பா உன் தோழி மேலே தான் இருக்கிறார் என்று கூறிய வாணியை அழைத்து போய் கதவை பூட்டி கொண்டாராம். பின்பு அவருக்கு தொல்லை கொடுத்துள்ளாராம். அப்போது எனக்கு எதுவும் தெரியாது என்ன செய்வதென்று தெரியாமல், தோழியிடம் சொல்லவில்லை. உங்கள் அப்பா கேரக்டர் அப்படி இப்படி என்று சொல்லியிருந்தால் அவள் என்ன செய்திருப்பாள் என்றும் தெரியவில்லை. அண்மையில் ஹாசினிக்கு நடந்தது போல் எனக்கும் நடந்திருந்தாள் என்ன ஆகிஇருக்கும் என உருக்கமாக பேசியுள்ளார்.