ஏற்கனவே கஜா புயலால் குடிநீர், மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கஜா புயல் கரையை கடந்த போது ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் திருவாரூர், நாகை, வேதாரண்யம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மீழாத நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என கடந்த 21ம் தேதி சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 8 மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது.

குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை உள்ளிட்ட இடங்களிலும் நேற்று மழை பெய்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் சாய்ந்திருந்த மின்சார கம்பிகளை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கஜா புயலால் ஏற்கனவே வீடுகள் சேதமடைந்து.. இருட்டில் வாழும் மக்களுக்கு, தற்போது மழை நீர் வீட்டிற்குள் வந்துவிட்டதால் விட்டிற்குள்ளேயே வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் இன்றும் தொடர் மழை பெய்து வருகிறது. இப்படி இயற்கை தொடர்ந்து அம்மக்களை தண்டித்து வருவதால் அவர்கள் உறங்கவும், தங்கவும் இடமின்றி அவர்கள் தவித்து வருகின்றனர்.

மழை முழுமையாக நின்று, மீட்டு பணிகள் முடிந்தால் மட்டுமே அவர்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் எனத் தெரிகிறது.