Devi 2 Trailer – பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா ஆகியோர் நடித்துள்ள தேவி 2 திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஏற்கனவே தேவி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தேவி 2 உருவானது. இப்படத்தையும் விஜயே இயக்கியுள்ளார்.

இப்படத்திலும் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். ஆனால், புதிதாக கோவை சரளா இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். இம்முறை இப்படத்தில் ஆவி பிரபுதேவாவின் உடலில் புகுந்து கொள்வதால் ஏற்படும் ரகளைகளை இப்படம் விவரிக்கிறது என்பதால் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது என நம்புவோம்.