ஆந்திரா நடிகரும் முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் மகனும் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமாகிய நந்தமுரி ஹரிகிருஷ்ணா நேற்று சாலை விபத்தில் மரணமடைந்தார்.

அவருக்கு பிரபல தமிழ் தெலுங்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது அஞ்சலியை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

ஹரிகிருஷ்ணாவும் தேவிஸ்ரீபிரசாத்தும் நெருங்கிய தொடர்புடையவர்கள்.

இவருக்கு தேவிஸ்ரீ பிரசாத் பேன்ஸ் க்ளப் சார்பாகவும் அஞ்சலி செலுத்தப்பட்டது.அதில் தேவி ஸ்ரீ பிரசாத் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தார்.