இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கைகோர்த்திருக்கும் படம் ‘வடசென்னை’. ஆடுகளம், பொல்லாதவன் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இப்படத்தில் சமுத்திரக்கனி,இயக்குநர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, ராதாரவி, கிஷோர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  சண்டையுடன் முடிந்த மாரி 2 ஷூட்டிங்!

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்த நிலையில், இப்படமானது இன்று திரையரங்குளில் ரலீசாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.