விஜயை தொடந்து இப்போது தனுஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் வளர்ந்துவரும் வட சென்னை படத்தில் தனுஷ் மூன்று வேடங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

விஐபி 2 படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்து நடித்து வரும் படம் வட சென்னை.  வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் மூன்று பாகங்களாக உருவாகிவருகிறது.  ஐஸ்வர்யா ராஜேஷ்  நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், தனுஷுக்கு வில்லனாக அமீர் நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால், மூன்று வேடங்களில் நடிக்கிறாராம் தனுஷ்.  மெர்சல் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.