அந்த வீடியோவுக்காக நானும் தனுஷும் காத்திருந்தோம்- அமலாபால் கவலை

பின்னணிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம்  பிரபல சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தனுஷ், த்ரிஷா, விஜய் டிவி புகழ் டிடி புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. அதுமட்டுமின்றி இன்னும் தனுஷ்-அமலா பால் குறித்த வீடியோவும் வெளியிடப்படும் என்று அந்த டுவிட்டரில் வெளியிடப்பட்டது. இதனால் கோலிவுட் ஸ்டார்கள் பலருக்கு தூக்கம் தொலைந்தது. நம்மை குறித்து எந்த போட்டோ அல்லது வீடியோ வெளிவருமோ என்று அச்சத்திலேயே இருந்தனர். இது குறித்து சுசித்ரா தரப்பில் விசாரித்தபோது, தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், யாரோ மர்ம நபர் ஒருவர் இந்த காரியங்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமலாபால் கூறியபோது, தனுஷுடன் இணைந்து நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். பாடகி சுசித்ரா எனது தோழிதான். அந்த டிவிட்டர் பக்கத்தில் வெளியான செய்திகளுக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நான் மற்றும் தனுஷ் தொடர்புடைய வீடியோ வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது. நானும், தனுஷும் அந்த வீடியோவிற்காக ஆவலுடன் காத்திருந்தோம். ஆனால், அப்படி எதுவும் வெளிவரவில்லை என்று கூறியுள்ளார்.