தனுஷூக்கும் கஜோலுக்கும் மும்பையில் என்ன வேலை? அதிர்ச்சியில் ஐஸ்வர்யா

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா இயக்கி வந்த ‘விஐபி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து கடந்த சில நாட்களாக தனுஷ் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் மும்பை திரும்பி கஜோலுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

விஐபி படத்தின் புரமோஷனுக்காக ஒரு மியூசிக் வீடியோவை தயாரிக்க செளந்தர்யா முடிவு செய்தார். அந்த வீடியோவில் தனுஷ் மற்றும் கஜோல் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்த செளந்தர்யா, தனது திட்டத்தை தனுஷிடம் கூற அவருடம் உடனே சனி, ஞாயிறு விடுமுறையில் மும்பை வந்து மியூசிக் வீடியோவில் நடித்துவிட்டு மீண்டும் ஹாலிவுட் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார். தனுஷூம் கஜோலும் நடித்த இந்த வீடியோ இன்னும் ஒருசில தினங்களில் தொலைக்காட்சியிலும் இணணயதளங்களிலும் வெளிவரவுள்ளதாம்

ஹாலிவுட் படப்பிடிப்பின் இடையே மும்பை வந்த தனுஷ், சென்னை வராததால் ஐஸ்வர்யா தனுஷ் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.