பவர் பாண்டி படத்தை தனுஷ் சிறந்த முறையில் இயக்கி இருந்தார் இதனால் சிறந்த நடிகர், தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை தாண்டி சிறந்த இயக்குனர் எனவும் பெயர் எடுத்தார்.

இதனால் டோலிவுட்டின் சிறந்த நடிகர் நாகார்ஜுனாவை இயக்கும் வாய்ப்பு கூட தனுசுக்கு கிடைத்தது. இப்போது தனுஷ் ஒரு பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார், நாகார்ஜூன்,அதிதி ராவ் உள்ளிட்டவர்கள் நடிக்கும் இப்படத்தில் நாகார்ஜூனின் கேரக்டர் அதி முக்கியத்துவம் வாய்ந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த கதைக்களத்தில் சரித்திர பின்னணி கொண்ட கதைக்களத்தில் நடித்து வருகிறாராம் நாகார்ஜூன் அது போன்ற ஒரு கதையை தனுஷ் உருவாக்கி உள்ளாராம். பெரிய பட்ஜெட்டை குறைத்து மிக சிறிய அளவில் எடுப்பது என்று அதற்கேற்ற வகையில் சிம்பிள் பட்ஜெட்டில் தயாராகி வருகிறதாம் இப்படம்.