தனுஷின் அடுத்த படத்தின் பிடப்பிடிப்புகள் நடிகர் அஜித்தால் தள்ளிப் போடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்த ‘தொடரி’ படம் நஷ்டமடைந்ததால், அதே நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடித்துக்கொடுப்பதாக தனுஷ் கூறியிருந்தார். அதன்பின், கொடி படத்தை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிஸ் தயாரிக்க புதிய படத்தில் தனுஷ் நடிக்க தயாரானார். அப்போதுதான், சத்யஜோதி பிலிஸ் நிறுவனம் தயாரித்து வந்த விஸ்வாசம் படத்தில் அஜித் நடித்துக்கொண்டிருந்தார்.

இந்த விவகாரம் அஜித்திற்கு தெரிய வந்ததும், நான் நடிக்கும் ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போது, அந்த நிறுவனம் வேறு படத்தை தயாரிக்கக் கூடாது என்கிற கொள்கையில் நான் உறுதியாக இருக்கிறேன். எனவே, விஸ்வாசம் படத்தை முடித்துவிட்டு நீங்கள் அடுத்து படத்து செல்லுங்கள் என சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் கறாராக கூறிவிட்டாராம்.

இதனால் தனுஷ் மொத்தமாக கொடுத்த கால்ஷீட் வீணாகி விட்டதாக தெரிகிறது. இதனால், அஜித் மீது தனுஷ் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.