தனுஷின் அடுத்த படமான ‘விஐபி 2’ ரிலீஸ் தேதி?

தனுஷ் நடிப்பில் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘விஐபி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் இயக்குனர் செளந்தர்யா இரவுபகலாக இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியை கவனித்து வருகிறார்.

இந்நிலையில் ‘விஐபி 2’ படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கவுள்ளதாக தனுஷ் தனது டுவிட்டரில் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் ‘#vip2 release date will be announced shortly today. Super excited’ என்று அறிவித்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

‘விஐபி’ படத்தின் வெற்றியை அடுத்து அதன் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் தனுஷுடன் முதல் பாகத்தில் நடித்த அமலாபால் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சீன் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.