சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வரவிருக்கும் படம் கனா இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா வாயாடி பெத்த புள்ள பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் சில நாட்களுக்குள் 35 லட்சம் பேர் பார்த்த வீடியோவாக பார்வையாளர்களை வசீகரித்துள்ளது.

இந்த பாடல் வெளியான அன்றே தனுஷ் பாடிய எழுமின் படப்பாடலும் வெளியானது இது வெறும் இரண்டு லட்சம் பார்வையாளர்களையே கொண்டிருந்தது தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

முன்பு தனுசுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சினை என்று கூறப்பட்ட நிலையில் இப்போது அவரது மகளுக்கும் தனுசுக்கும் போட்டியா என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஜாலியாக எழுதி வருகின்றனர்.