dhanush
மிக இளம் வயதில் சினிமாவில் அடி எடுத்து வைத்தனர் தனுஷ்.  `துள்ளுவதோ இளமை’ படம் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய அவருக்கு இன்று 35 வயது ஆகிறது.
அவருடைய சினிமா பயணத்தில் நடிகனாக மட்டுமல்லாமல், இயக்குனராக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக, பாடகராக எனது பன்முக திறனை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் மொழியை தாண்டி, இந்தியிலும், ஹாலிவுட்டில் தடம் பதித்துள்ளார் இந்த சரித்திர நாயகன்.
1. தனுஷ்சின் ஒரிஜினல் பெயர் வெங்கடேஷ் பிரபு  துள்ளுவதா இளமை படத்தின் போது .கமலின் `குருதிப்புனல்’ படத்தில் வரும், ஆப்ரேஷன் தனுஷ் என்ற பெயரில் இருந்து தனுஷ் என்கிற பெயரை தேர்வு செய்துள்ளார் வெங்கடேஷ் பிரபு.
2. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்து சமையல் கலை வல்லுனராக ஆசைப்பட்டராம் தனுஷ்.
3.  தனுஷ்சிடம் “உன் கலர், எந்த ஒரு கேமராமேனும் ரசித்து லைட்டிங் வைக்கிற ஒன்று. இரண்டாவது, நீ ஒரு இத்தாலியன் மாடல் போல இருக்கிறாய்” என ‘அது ஒரு கனா காலம்’ படத்தில் க்ளோசப் வைப்பதைக் கண்டு தயங்கிய தனுஷிடம் கூறியிருக்கிறார் பாலுமகேந்திரா.
4. ட்விட்டரில் 70 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலாயர்கள் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் தனுஷ்தான்.
5. தனுஷ் அறிமுகம் ஆனது முதலே ஒரே எடையும் காணப்படுவதற்கு காரணம், அவர் ஒரு வெஜிடேரியன் விரும்பியாம். முட்டை மட்டும் சேர்த்துக் கொள்வாராம். “நொறுக்குத் தீனி, இனிப்புனு வெயிட் போடும் சமாச்சாரத்தை சேர்ப்பதில்லையாம்.
6. வெறும் 6 நிமிடத்தில் தனுஷ் எழுதிய பாடல் தான் கொலைவெறி. இது உலகம் முழுக்க பெரும் ஹிட்டடித்தது.
7. தனுஷ், புரூஸ் லீயின் மீது பேரன்பு கொண்டவர். தனது வுண்டர்பார் அலுவலகத்தில் கூட அவரது மேஜை மீது சிறிய ப்ரூஸ் லீ சிலை வைத்துள்ளார்.
8. பாலிவுட்டில் `ராஞ்சனா’ படத்துக்கு ஒப்பந்தமான போது தனுஷுக்கு சுத்தமாக இந்தி வராது. ஆனால், முதல் படத்துக்கே சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம் பேர் விருது வென்றார்.
9.திறமையானவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பாதை அமைத்து கொடுப்பது தனுஷ்சின் சிறந்த குணம்.அதற்கு சிறந்த உதாரணம் அனிருத், சிவகார்த்திகேயன், இயக்குநர்கள்,`காக்கா முட்டை’ மணிகண்டன், வேல்ராஜ் ஆகியோர்.
10. தனுஷ்க்கு நெகட்டிவ் ரோல் மிகவும் பிடிக்கும.  புதுப்பேட்டை, மயக்கம் என்ன, 3 போன்ற படங்களில் சிறப்பாக நடித்திருப்பார்.
குறீப்பாக புதுப்பேட்டையில்  வில்லன்  இப்படி இருந்தால் தான் மக்கள் ஏற்பார்கள் என்ற இலக்கணத்தை உடைத்து எறிந்தார் தனுஷ்.
11. ஆரம்பத்தில் பல வெற்றிகளை கண்டாலும், இடையில் பல தோல்விகளையும் கண்டார்.  அஜித்துக்கு பில்லா என்றால், தனுக்கு வேலையில்லா பட்டதாரி அவருக்கு பெரிய ப்ரேக் கொடுத்த படமாக பார்க்கப்படுகிறது.
12.  தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, சராசரி இளம் வயதுக்கார இயக்குனரின் படைப்பு போல் அல்லாமல், 50 வயதைக் கடந்த, பல படம் இயக்கிய பழுத்த இயக்குநரை போல் இருந்தது.
13. தோல்விகளை கண்டு மனம் தளறாமல் விடாமல் போராடக்கூடிய குணம் உள்ளவர் என்பதால், தனுஷ் இன்னும் பல ஆண்டுகள் நட்சத்திர  நாயகனாக ஜொலித்து கொண்டு இருப்பார்.
பிறந்தாள் வாழ்த்துகள் தனுஷ்!