தனுஷின் 35வது பிறந்தநாள் கொண்டாட்டம்

திரையில் தோன்றும் நடிகர் எல்லாம் ஆஜானுபாகுவான உடலுடனும் அழகான தோற்றத்துடன் கலராக இருக்க வேண்டும் என்ற தோற்றத்தை உடைத்து காட்டியவர் நடிகர் தனுஷ். நடிகன் என்பவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் அவனுக்கு நடிக்க தெரிந்திருந்தால் போதும் என்ற புதிய இலக்கணத்தை படைத்தவர்.

கடந்த 2002ம் வருடம் வந்த துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாவுக்கு வந்த தனுஷ் இந்த துள்ளுவதோ இளமை நல்ல வெற்றியை அடைந்தபோதும் கண்டுகொள்ளப்படவில்லை காரணம் அவரது ஒல்லியான உடல் தோற்றம். ஆனால் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் அடுத்து வந்த காதல் கொண்டேன் படத்தின் சிறந்த நடிப்பின் மூலம் புகழ் ஏணியை எட்டி பிடித்தார் தனுஷ்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் மகளையே மணமுடித்து அவரின் திரைப்பயணம் டாப் கியரில் பறந்தது.

சுள்ளான், பொல்லாதவன், நையாண்டி,ஆடுகளம், மாரி என அவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது ஆடுகளம் படத்துக்கு தேசிய விருதும் வாங்கினார். இப்போது தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்து தனது மாமனாரை வைத்து காலா படம் வரை தயாரித்து திரையுலகில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுவிட்டார்.

இன்று அவரின் 35வது பிறந்த நாள்