தனுஷ்: நேற்று ரூ.80 லட்சம் நன்கொடை, இன்று 7000 வாட்ஸ் மின்சாரம் திருட்டு

நடிகர் தனுஷ் நலிந்த விவசாயிகள் 125 பேர்களுக்கு தலா ரூ.50000 என சுமார் 80 லட்சம் நிதியுதவி செய்தார் என்று நேற்று வெளிவந்த செய்தி அவரது இமேஜை ஒரேயடியாக உயர்த்தியது. அனைவரிடமும் பாராட்டு பெற்ற விஜய் இன்று 7000 வாட்ஸ் மின்சாரம் திருடியதாக ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.

தனுஷ் தனது சொந்த ஊருக்கு இன்று குடும்பத்துடன் குலதெய்வ வழிபாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது குடும்பத்தின் தேவைக்காக ஒரு கேரவனும் சென்றுள்ளது. இந்த நிலையில் அந்த கேரவனுக்கு திருட்டுத்தனமாக ஊர்பொது மின்சார கம்பத்தில் இருந்து 7000 வாட்ஸ் மின்சாரம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மின்சார வாரியத்தின் அதிகாரிகளுக்கு புகார் செல்ல அதிகாரிகள் உடனடியாக வந்து ஆய்வு செய்தனர். பின்னர் கேரவன் டிரைவருக்கு ரூ.15760 அபராதம் விதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.