அனிருத் ஒத்து வந்த பாக்கலாம் – எதை சொல்கிறார் தனுஷ்?

தன்னுடய படத்திற்கு அனிருத்தின் இசை தேவைப்பட்டால் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்த 3, மாரி, வேலை இல்லா பட்டதாரி ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்தார். இந்த படங்களில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் தனுஷ் தயாரித்த எதிர் நீச்சல், நானும் ரவுடிதான் ஆகிய படங்களுக்கும் அனிருத்தே இசையமைத்தார். அந்தப் படங்களிலும் இடம் பெற்ற பாடல்களும் ஹிட் ஆகின.

ஆனால், ஏதோ காரணத்தால் அனிருத்திடமிருந்து பிரிந்த தனுஷ், தனது வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் வேறொரு இசையமைப்பாளரை பயன்படுத்தினார். அதேபோல், அவர் இயக்கிய பவர் பாண்டி படத்திலும் அனிருத் இசையமைக்கவில்லை. எனவே, அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி சமீபத்தில் தனுஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய தனுஷ் “ அனிருத் மிகவும் வெஸ்டர்னாக இசையமைக்கிறார்.  அவருக்குன்னு ஓரு தனி பானி இருக்கு. நான் நடிக்கும் ஒரு படத்திற்கு அவரின் இசை தேவைப்பட்டால் அவருடன் இணைந்து பணியாற்றுவேன்” எனக் கூறியுள்ளார்.