விஐபி 2′ டீசர்: கஜோலுக்கு இருக்கும் மவுசு அமலாபாலுக்கு இல்லையா?

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘விஐபி 2’ படத்தின் டீசர் நேற்று வெளியாகி தனுஷ் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த டீசருக்கு ரசிகர்களிடம் இருந்து ஏராளமான பாராட்டுக்களும் ஒருசில கண்டனங்களும் எழுந்துள்ளது

இந்த டீசரில் கஜோல் காட்சிகளை எதிர்பார்த்ததாகவும், ஆனால் அந்த காட்சிகள் இல்லாதது ஏமாற்றத்தை தந்ததாகவும் ஒருசிலர் கமெண்ட் பதிவு செய்திருந்தனர்.

மேலும் ஒருசிலர் தனுஷ் டயலாக் பேசும் காட்சிகள் டீசரில் இல்லையே என்று வருத்தம் தெரிவித்திருந்தனர்.

ஆனால் ஒருவர் கூட இந்த படத்தின் நாயகி அமலாபாலை கண்டுகொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.