தமிழ் சினிமாவுக்கு முதல்வருக்கும் அப்படியொரு பொருத்தம் உண்டு, திரைப்படங்களில் வசனம் எழுதிய அறிஞர் அண்ணா, கலைஞர் என்று பல தமிழ் சினிமா கலைஞர்கள் முதல்வர் ஆனார்கள்.

சினிமாவில் ஏழைப்பங்காளனாக நடித்து முதல்வர் ஆனவர் எம்.ஜி.ஆர் மக்கள் மனதில் இன்றும் நீங்காத இடம் பிடித்து வாழ்ந்து வருகிறார்.

கடந்த 2005ல் கட்சி துவங்கிய நடிகர் விஜயகாந்த் அவர்களால் இன்று வரை முதல்வர் பதவியை பிடிக்க முடியவில்லை. மேலும் , கமல் கட்சி துவங்கியும் ரஜினி அதற்கான பணிகளில் ஈடுபட்டு தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

பல நடிகர்கள் தாங்கள் நன்றாக நடித்துக்கொண்டிருக்கும்போது மன்றப்பணிகள் ரசிகர்களை அரவணைத்து செல்வது என செய்து வருகின்றனர்.

ரசிகர்களும் கொஞ்சம் அதிக உணர்ச்சி வசப்பட்டு போஸ்டரில் எதையாவது குறிப்பிட்டு விடுகின்றனர். சமீபத்தில் நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட வருங்கால முதல்வரே போஸ்டர் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.