அஜித், விஜய் பாணியில் ஐரோப்பா செல்கிறார் தனுஷ்

04:53 மணி

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘வடசென்னை’ படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துவிட்டதாக வெளிவந்த தகவல்களை அடுத்து தனுஷ் அடுத்ததாக தனது ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தனுஷ் விரைவில் இந்த படத்தின் படபிடிப்பிற்காக ஐரோப்பா நாடுகளில் ஒன்றாகிய பெல்ஜியம் செல்லவுள்ளார். ஏற்கனவே அஜித் பல்கேரியாவிலும், விஜய் மாசிடோனியாவிலும் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் தனுஷூம் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் செல்லவுள்ளார்

இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்து தனுஷ், கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. அதன்பின்னர் மீண்டும் ‘வடசென்னை’ பின்னர் கார்த்திக் சுப்புராஜ் படம் என தனுஷ் பிசியாகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393